சேரனை அடித்த சோழன், கோபத்தில் சந்தா எடுத்த அதிரடி முடிவு, பதறிய நிலா… அய்யனார் துணை சீரியல் புரொமோ


அய்யனார் துணை

Ayyanar Thunai: அண்ணன்-தம்பிகள் என்றால் இப்படி இருக்கனும் டா என மக்கள் சொல்லும் அளவிற்கு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் அய்யனார் துணை.

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் இனி மிகவும் பரபரப்பாக, சுவாரஸ்யமாக செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சேரனை அடித்த சோழன், கோபத்தில் சந்தா எடுத்த அதிரடி முடிவு, பதறிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai Serial Nov 19 Episode Promo

எபிசோட்

இன்றைய எபிசோடில், சந்தா வழக்கம் போல் தனது டிராமாவை துவங்கிவிட்டார். பல்லவன் நிகழ்ச்சியை முடித்தவர்கள் வீட்டிற்கு வந்ததும் சந்தா, நிலா தன்னை லூசு சொன்னதாக கூறுகிறார்.

உடனே நடேசன், நிலா அப்படி யாரையும் சொல்லும் பெண் கிடையாது, நீ என்ன செய்தாய் என கேட்கிறார். அப்படியே வாக்குவாதம் பெரிதாக சந்தா, சேரன் பல்லவனை சொன்னது எனக்கு கஷ்டமாக இருந்தது, அதை கேட்டதும் நிலா என்னை லூசு சொன்னார் என்கிறார்.

சேரனை அடித்த சோழன், கோபத்தில் சந்தா எடுத்த அதிரடி முடிவு, பதறிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai Serial Nov 19 Episode Promo

அப்படியே வாக்குவாதம் பெரிதாக நிலாவிற்காக சோழன் பேச துவங்க அண்ணன்-தம்பிகளுக்குள் சண்டை வருகிறது. பாண்டியுடன் சோழன் அடிதடியில் இறங்கியபோது சேரன் பக்கத்தில் வர சோழன் சேரனை அடிப்பது போல் ஆகிவிட்டது.

இதனால் சேரன் எதுவும் சொல்லாமல் வீட்டைவிட்டு கிளம்ப சோழன் வருத்தம் அடைகிறார். அப்போதும் விடாமல் சந்தா சண்டையில் இறங்குகிறார்.

சேரனை அடித்த சோழன், கோபத்தில் சந்தா எடுத்த அதிரடி முடிவு, பதறிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ | Ayyanar Thunai Serial Nov 19 Episode Promo

புரொமோ


இன்று பரபரப்பாக சண்டை நடக்க ஏற்கெனவே சேரன் வீட்டைவிட்டு கிளம்பிவிட்டார். சந்தாவும் உங்களிடம் பேச்சு வாங்கி நான் இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவரும் வீட்டைவிட்டு கிளம்புகிறார்.

அடுத்து கதையில் என்ன நடக்குமோ பொறுத்திருந்து காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *