நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்தா? பரவும் செய்திக்கு அவரே விளக்கம்
சினிமா துறை பிரபலங்களில் விவாகரத்து செய்திகள் தொடர்ந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறது. ஜீ.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி நடிகர் விஜய், பவன் கல்யாண் வரை இந்த லிஸ்ட் நீள்கிறது.
இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது கணவர் இயக்குனர் வம்சியை விவாகரத்து செய்வதாக தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது.
விளக்கம்
விவாகரத்து என பரவும் செய்திக்கு விளக்கம் கொடுத்த ரம்யா கிருஷ்ணன், “நாங்கள் 100% married. பணிசூழல் மற்றும் மகனின் உடல்நிலை ஆகிற காரணங்களால் தான் நாங்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் தங்கி இருக்கிறோம்.”
“நான் சென்னையிலும், கணவர் ஹைதராபாத்திலும் வசிக்கிறோம். இது இரண்டு பேரும் இணைந்து எடுத்த முடிவு தான்” என ரம்யா கிருஷ்ணன் கூறி இருக்கிறார்.
