ஓம் திரைப்படத்தின் முதல் விமர்சனம்


O.M movie first review: தனுஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஓம் திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. இதனை வெளிநாட்டு விநியோகஸ்தர் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

‘ஓம்’ (O.M): Operation Mole

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓம்’ (O.M): Operation Mole. இப்படத்தில் தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி, ஸ்ரீலீலா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நட்சத்திரம் நஸ்ருதீன் ஷா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடர் வெற்றிகள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்து வரும் நிலையில், ஓம் திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் விமர்சனம்

இந்த நிலையில், வெளிநாட்டு விநியோகஸ்தர் தனது X பக்கத்தில் ஓம் திரைப்படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இதில், “OM IS AN UNMISSABLE THEATRE EXPERIENCE” என தெரிவித்துள்ளார். மேலும், “இதுதான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனுஷின் திரைப்படம். இது ஒரு பிரம்மாண்டமான கம்பேக்-ஆக (comeback) அமையும் என்பது உறுதி! தமிழ் சினிமாவிற்கு மிகச் சிறப்பாக அமைந்திருக்கும் இந்த ஆண்டில், நவம்பர் 20-ஆம் தேதி இன்னும் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறப்போகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவு தற்போது தனுஷ் ரசிகர்களிடையே வைரலாகி, படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. என்னதான் இருந்தாலும், நவம்பர் 20-ஆம் தேதி ரசிகர்களிடையே ஓம் திரைப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *