'தி ஒடிசி' திரைப்படத்தின் வசூல் வேட்டை.. பாக்ஸ் ஆபிஸில் சாதனை

தி ஒடிசி
உலகப்புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன், இவரது இயக்கத்தில் Interstellar, Inception, The Dark Knight, Dunkirk என பல ஆகச்சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் ‘தி ஒடிசி’. இப்படத்தில் டாம் ஹொலண்ட், Matt Damon, Anne Hathaway, ஜென்டயா ஆகியோர் நடித்துள்ளனர்.
ட்ரோஜன் போருக்குப் பிறகு, இத்தாக்காவின் (Ithaca) கிரேக்க மன்னரான ஒடிஸியஸ் பல ஆபத்தான சாகசங்களை கடந்து, தனது சொந்த நாட்டிற்கு திரும்பவும், தன் மனைவியான பெனிலோப்பை சந்திக்கவும் மேற்கொள்ளும் நீண்ட மற்றும் ஆபத்தான பயணத்தை மையமாக வைத்துத்தான் இப்படத்தை இயக்குநர் நோலன் உருவாக்கியுள்ளார்.
வசூல்
இப்படம் வெளிவந்து 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ‘தி ஒடிசி’ திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.






