கீர்த்தி சுரேஷ், ராதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘அக்கா’.. டிரைலர் இதோ
இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘அக்கா’.
இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா அப்டே முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் 31-ஆம் தேதி இந்த வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நிலையில், ‘அக்கா’ வெப் சீரிஸின் டிரைலரை அதிகாரப்பூர்வமாக நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா அப்டே இருவரும் கேங்ஸ்டர்களாக மிரட்டியுள்ள ‘அக்கா’ வெப் சீரிஸின் டிரைலர் இதோ:
