டபுள் ஆக்குபன்சி (Double Occupancy): திரை விமர்சனம்

டபுள் ஆக்குபன்சி (Double Occupancy): திரை விமர்சனம்


சந்தோஷ், சம்யுக்தா, ரேஷ்மா வெங்கடேஷ் ஆகியோர் நடிப்பில் பேண்டஸி ரொமாண்டிக் காமெடியாக வெளியாகியுள்ள டபுள் ஆக்குபன்சி திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

டபுள் ஆக்குபன்சி (Double Occupancy): திரை விமர்சனம் | Double Occupancy Movie Review

கதைக்களம்



போஸ் வெங்கட் தனக்கு பிறந்த பெண் குழந்தை இறந்துவிட, கடவுளிடம் மன்றாடுகிறார்.

அப்போது ஒளிக்கீற்று ஒன்று குழந்தையின் மீது பட்டு அது ஆண்குழந்தையாக மாறி விடுகிறது.



ஆச்சரியமாகவும், விந்தையாகவும் இருந்தாலும் குழந்தை உயிர்பிழைத்த மகிழ்ச்சியில் போஸ் வெங்கட், வினோதினி தம்பதி இருக்க காலை மற்றொரு அதிர்ச்சி விஷயம் நடக்கிறது.

அதே குழந்தை பெண் பாலினமாக மாறியிருக்கிறது.

டபுள் ஆக்குபன்சி (Double Occupancy): திரை விமர்சனம் | Double Occupancy Movie Review

பின்னர் தான் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த குழந்தை பெண்ணாகவும், இரவு முழுவதும் ஆணாகவும் இருக்கும் என்பது அவர்களுக்கு விளங்குகிறது.

அதனால் இந்த விஷயத்தை யாருக்கும் கூறாமல் ரஜினி என பெயர் சூட்டி, ஆண் பிள்ளையை இரவில் இரகசியமாக வளர்க்கிறார்கள்.



ஒருநாள் போஸ் வெங்கட், வினோதினி தம்பதி விபத்தில் இறந்துவிட, ரஜினி (ரேஷ்மா) அவர்களின் இறுதிச்சடங்கை முடித்துவிடுகிறார். இது இரவில் ஆணாக இருக்கும் ரஜினிக்கு (சந்தோஷ்) தெரிய வர அவள் மீது கடும் கோபம் கொள்கிறார்.

டபுள் ஆக்குபன்சி (Double Occupancy): திரை விமர்சனம் | Double Occupancy Movie Review

இவர்கள் சென்னைக்கு சென்று வேலையில் சேர, இருவருக்கும் காதலன், காதலி கிடைக்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் தங்கள் காதலர்களுடன் சேர்ந்தார்களா? அவர்களின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்



பேண்டஸி காமெடி ஜானரில் இப்படத்தை அஸ்வின் கந்தசாமி என்பவர் இயக்கியிருக்கிறார்.

ஆரம்பத்திலேயே இந்த கதை இப்படித்தான் செல்லப்போகிறது என்பதை இயக்குநர் தெளிவாக காட்டியதால், எந்த குழப்பமும் இன்றி கதையுடன் நாம் பயணிக்க முடிகிறது.



எஸ்.ஜே.சூர்யாவின் ‘நியூ’ படத்தின் ஐடியாவாக தோன்றினாலும், பாலினத்தை மாற்றி வித்தியாசமாக கொடுத்துள்ளார் இயக்குநர்.

கதைக்கருவே சுவாரஸ்யமாக இருப்பதால் முதல் பாதி அடுத்து என்ன அடுத்து என்ன என்று வேகமாக செல்கிறது.

டபுள் ஆக்குபன்சி (Double Occupancy): திரை விமர்சனம் | Double Occupancy Movie Review

ஆனால் ஒரு கட்டத்தில் வில்லனை அறிமுகப்படுத்திவிட்டு, பின்னர் அவரை கிளைமேக்ஸ் நெருங்கும்போது கொண்டுவந்தது தான் ஒரு மைனஸ். மற்றொன்று காமெடி; பெரிதாக காமெடி ஒர்க்அவுட் ஆகவில்லை.

மற்றபடி, இரண்டாம் பாதியில் முதல் பாதியை விட சுவாரஸ்யம் குறைவாக இருந்தாலும் சென்டிமென்ட் காட்சிகள் மனதை தொடும் வகையில் அமைந்தது சிறப்பு.


கிளைமேக்ஸ் கண்டிப்பாக எதிராத நல்ல யோசனை தான். என்னதான் இளைஞர்களை குறிவைத்து எடுத்திருந்தாலும், கிளாமர் மற்றும் நெருக்கமான காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படமாக அமைந்திருக்கும்.

டபுள் ஆக்குபன்சி (Double Occupancy): திரை விமர்சனம் | Double Occupancy Movie Review

படத்தின் வேகத்திற்கு பின்னணி பெரிதும் உதவியிருக்கிறது. சாம் சி.எஸ் அந்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

VFX குழு சிறப்பாக செய்துள்ளனர். கலைச்செல்வனின் ஒளிப்பதிவும், பிரவீன் அந்தோணியின் படத்தொகுப்பும் கச்சிதம். 

க்ளாப்ஸ்



கதைக்கரு



காட்சியமைப்பு



VFX



பின்னணி இசை



பல்ப்ஸ்



காமெடி ஒர்க்அவுட் ஆகாதது



மொத்தத்தில் இந்த DO (Double Occupancy) வித்தியாசமான கதைக்களத்தில் நம்மை ஆட்கொள்கிறது. இளைஞர்கள் ரசிக்கக்கூடிய படம். 

டபுள் ஆக்குபன்சி (Double Occupancy): திரை விமர்சனம் | Double Occupancy Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *