17 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

பிளாஸ்ட்
அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி இணைந்து நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் பிளாஸ்ட். இப்படத்தை அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியிருந்தார்.
ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரன், விவேக் பிரசன்னா, திலீபன், வினோத் சாகர் என பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல்
ஆக்ஷன் பேமிலி டிராமாவாக இப்படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர். கலவையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது வைக்கப்பட்டாலும் கூட, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது.
நாளுக்கு நாள் பிளாஸ்ட் திரைப்படத்தின் வசூல் அதிகரித்து வரும் நிலையில், 17 நாட்களில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 17 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 68 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.






