ஜெட்லீ: திரை விமர்சனம்

ஜெட்லீ: திரை விமர்சனம்


சத்யா, வெண்ணிலா கிஷோர், ரியா சிங்கா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு காமெடி படமாக வெளியாகியுள்ள ஜெட்லீ பார்வையாளர்களை ஈர்த்ததா என்று பார்ப்போம்.

ஜெட்லீ: திரை விமர்சனம் | Jetlee Movie Review

கதைக்களம்


பிரஜாபதி வங்கி திவாலானதால் வாடிக்கையாளர்கள் அதன் நிறுவனர் பிரஜாபதிக்கு (அஜய்) எதிராக போர்க்கொடி தூக்குகிறார்கள்.



அதனை சமாளிக்க வங்கியின் COO-வை பழி ஏற்க செய்து, அவரை கொலை செய்து தற்கொலை போல் மாற்றிவிடுகிறார் பிரஜாபதி.

ஆனாலும் அவருக்கு அழுத்தம் அதிகரிக்க துபாய்க்கு சென்று பதுங்கிவிடுகிறார். அங்கு போலீஸ் பிரிவு அதிகாரியான ரியா சிங்காவினால் கைது செய்யப்பட்டு, இந்தியாவிற்கு விமானத்தில் அழைத்து செல்லப்படுகிறார்.

ஜெட்லீ: திரை விமர்சனம் | Jetlee Movie Review

அதே விமானத்தில் பிரஜாபாதியை கொலை செய்ய சதி நடக்கிறது. அதனை தன்னை யார் என்றே தெரியாத கண் மருத்துவர் என்று அழைக்கப்படும் வேத் வியாஸ் (சத்யா) தடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் நீயே கடத்த திட்டம் தீட்டிவிட்டு இப்போது பிரஜாபதியை காப்பாற்ற பார்க்கிறாயா என்று ஒரு கதாபாத்திரம் வியாஸிடம் கேட்கிறது.


அதனால் தான் ஒரு கடத்தல் கும்பலை சேர்ந்தவனா? மருத்துவரா அல்லது பயங்கரவாதியா? என்று வியாஸ் குழம்புகிறார். அதன் பின்னர் பிரஜாபதிக்கு என்ன ஆனது? உண்மையில் வியாஸ் யார்? என்பதற்கு விடையே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்


மத்து வத்லரா பட சீரிஸின் வெற்றிக்கு பிறகு சத்யா, ரித்தேஷ் ராணா கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது.

அதனாலேயே இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

முதல் பாதியில் பிளாக் காமெடி, ஸ்பூப், ரெபெரென்ஸ் என படம் விறுவிறுவென நகர்கிறது.

சில இடங்களில் காமெடி ஓவர்டோஸாக இருந்தாலும் கதையோட்டத்தில் அவை சிறு உறுத்தலாக மட்டுமே தெரிகின்றன.


ஆனால், இரண்டாம் பாதி தான் பெரும் சோதனை. பேசி பேசியே சிரிக்க வைப்போம் என்பதுபோல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக ஹீரோ சத்யா ரொம்பவே பேசி அறுவை போடுகிறார்.

நான் யார்? எவடு? எவரு? என்று அவர் கேட்கும்போது அந்தந்த படங்களின் போஸ்டர்களை காட்டுவது, கண் மருத்துவர் என்று கூறி செய்யும் காமெடி.

ஜெட்லீ: திரை விமர்சனம் | Jetlee Movie Review



நர்ஸ் என்றால் பெண் தான் வர வேண்டுமா; ஆணும் நர்ஸ் தான் என்று கூறுவது போன்ற காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

அதே சமயம் 4th wall breaking என்பதை இரண்டு மூன்று இடங்களில் செய்வது செம கடுப்பு. இரண்டாம் பாதியில் சீக்கிரம் படத்த முடிங்கப்ப என்று கூறும் அளவிற்கு இழுவையோ இழுவை.


நடிகர்களைப் பொறுத்த வரை சத்யா படத்தை தாங்குகிறார். அவர் கண் தெரியாதவர் என்று கூறி ஹீரோயினை சைட் அடிப்பது, சண்டைக்காட்சிகளில் காமெடி என பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். அதே சமயம் மைனஸாகவும் அவர்தான் இருக்கிறார்.

ஹீரோயின் ரியா சிங்கா ஒவ்வொரு ப்ரேமிலும் அழகாக தெரிகிறார். ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புவதுடன் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்.

அஜய், கபீர் ஆகியோர் வில்லத்தனத்தை தங்கள் பாணியில் செய்துள்ளனர்.

வெண்ணிலா கிஷோர் வழக்கமான காமெடி பாணியை நல்ல முறையில் செய்துள்ளார். ஹர்ஷா செமுடு ஒன்லைன் காமெடியில் அட்டகாசம் செய்துள்ளார். ஆனால் ஸ்ரீனிவாச ரெட்டியை பயன்படுத்தாமல் வீணடித்திருக்கிறார் இயக்குநர்.

ஜெட்லீ: திரை விமர்சனம் | Jetlee Movie Review

பறக்கும் விமானத்தில் நடக்கும் கதையை முதல் பாதிவரை நன்றாக கொண்டு சென்ற இயக்குநர் ரித்தேஷ் ராணா இரண்டாம் பாதியில் தடுமாறிவிட்டார்.

டெக்னீக்கலாக மிகவும் வலுவான படம்தான். மிகவும் கலர்புல் ஆகவும் இருக்கிறது. ஆடை வடிவமைப்பாளரை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

க்ளாப்ஸ்


முதல் பாதி


ஒன்லைன் காமெடி


தெலுங்கு படங்களின் ரெபெரென்ஸ்


ஆக்ஷன்



பல்ப்ஸ்


இரண்டாம் பாதி திரைக்கதை


பொறுமையை சோதிக்கும் காட்சிகள்


படத்தின் நீளம்


மொத்தத்தில் இந்த ஜெட்லீ நன்றாக டேக் ஆப் செய்து, ஏனோதானோவென பறந்து லெண்டிங்கில் கோட்டைவிட்டுவிட்டார். 

ஜெட்லீ: திரை விமர்சனம் | Jetlee Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *