இந்த புகைப்படத்தில் தென்னிந்திய பிரபலம் யார் என்று தெரியுமா? இதோ பாருங்க

வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தென்னிந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இவர் தமிழில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
ஐஸ்வர்யா லட்சுமி
அது வேறு எந்த திரைப்படமும் இல்லை, கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த கட்டா குஸ்தி தான். இந்த புகைப்படத்தில் உள்ளவர் கட்டா குஸ்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பட்டையை கிளப்பிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமிதான்.
கட்டா குஸ்தி திரைப்படம் மட்டுமின்றி மணி ரத்னம் இயக்கிய மாபெரும் திரைப்படம் பொன்னியின் செல்வனில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், மாமன் திரைப்படத்திலும் இவருடைய நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.






