இடுப்பில் காயம், கால் அசைக்க முடியாத நிலை! நடிகை ராஷ்மிகா வருத்தமாக சொன்ன விஷயம்

இடுப்பில் காயம், கால் அசைக்க முடியாத நிலை! நடிகை ராஷ்மிகா வருத்தமாக சொன்ன விஷயம்


நடிகை ராஷ்மிகா சமீபத்தில் ஷூட்டிங்கில் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

என்ன நடந்தது என காயம் பற்றி தற்போது அவரே விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

காலை தூக்க முடியாத நிலை

காயங்கள் மோசமானவை. இது யாருக்கும் தெரியாமல் தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால் பரவாயில்லை.. மன்னித்துவிடுங்கள், உங்களுக்கு எதுவும் பதில் அளிக்காமல் இருந்தேன், இப்போது மீண்டும் வந்துவிட்டேன்.

இது கொஞ்ச நாள் முன்பு நடந்தது. இது எனக்கு அடுத்தடுத்து மூன்றாவது காயம். என் உடலை இனி நிச்சயமாக மனித உடல் போல தான் நான் நடத்த வேண்டும், ஒரு மெஷின் போல இல்லை.

இந்த காயம்.. அதை எப்படி சொல்வது.. நமது இடுப்பை கால்கள் உடன் இணைக்க ஒவ்வொரு பக்கமும் 4 Tendon என்ற தசைநாண் இருக்கும். எனது வலது இடுப்பில் ஒரு tendon கிழிந்துவிட்டது. அது தற்போது மீண்டும் ஒன்று சேர வேண்டும். அப்போது தான் நான் காலை தூக்கவே முடியும்.

Mysaa படத்தின் ஷூட்டிங்கில் தான் அது நடந்தது. நான் நடித்ததிலேயே இதுதான் மிகவும் aggressive ஆன படம்.

இடுப்பில் காயம், கால் அசைக்க முடியாத நிலை! நடிகை ராஷ்மிகா வருத்தமாக சொன்ன விஷயம் | Rashmika Mandanna Update About Her Hip Injury

வலிக்கிறது, ஆனால்..

வருத்தப்படதீங்க. வலிக்கிறது, ஆனால் இது தாங்க முடியாத அளவுக்கு எல்லாம் இல்லை. நீயாக பிரேக் எடுக்க மாட்டாய், அதனால் நானே பிரேக் கொடுக்கிறேன் என கடவுள் சொல்வது போல இருக்கிறது.

  

GalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *