அது உண்மையான போட்டோ அல்ல.. நடிகர் சத்யராஜ் மகள் பற்றிய வதந்திக்கு விளக்கம்

நடிகர் சத்யராஜ் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவர் அரசியலும் பேசி வருகிறார்.
அவரது மகள் திவ்யா திமுகவில் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு முன் நடிகர் சத்யராஜ் விஜய்யை மிகவும் மோசமாக விமர்சித்து பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அத்தனை விமர்சனங்களையும் தாண்டி தற்போது விஜய் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சராகி இருக்கிறார்.
அது வதந்தி
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தன்னுடைய மகள் திவ்யா சத்யராஜ் பற்றி பரவும் வதந்திகள் உண்மை இல்லை என ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் மகள் ஒரு நபருடன் இருக்கும் போட்டோ உண்மை இல்லை என கூறி இருக்கிறார். அது திருமண போட்டோ என கூறி youtube-ல் சிலர் வதந்தி பரப்புகிறார்கள் எனவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.






