ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. ஒருவர் பலி!

ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. ஒருவர் பலி!


நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் 2ன் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ரிலீஸ் செப்டம்பருக்கு தள்ளிப்போய்விட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் நெல்சன் விரும்பிய நிலையில் அதற்காக 15 நாட்கள் சென்னையில் ஷூட்டிங் நடக்கிறது.

ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. ஒருவர் பலி! | Man Dies Due To Electrocution At Jailer 2 Shooting


விபத்து

சென்னை பனையூரில் இருக்கும் அதித்யராம் ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடக்கிறது. அங்கு வீடு போன்ற செட் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஃபேன் மாட்டும் வேலை செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..

ரஜினி பட ஷூட்டிங்கில் ஒருவர் பலியானது சினிமா வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *