கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டேஸ்வரியின் பழைய ரகசியம் அம்பலம்


Zee தமிழில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பரபரப்பான தொடர் ‘கார்த்திகை தீபம்’. இந்தத் தொடரில் நாளைய எபிசோடில், பல வருடங்களாக யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாமுண்டேஸ்வரியின் பழைய கதை வெளிச்சத்துக்கு வரப்போகிறது. அதுவும் யோகியின் உண்மையான முகத்தை சாமுண்டேஸ்வரி தெரிந்துகொண்ட சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கப் போகிறது.

கார்த்திக்கிடம் உண்மையைச் சொன்ன மயில்வாகனம்:

நாளைய எபிசோடின் ஆரம்பத்தில், கார்த்திக்கும் மயில்வாகனமும் ஸ்ரேயாவின் வீட்டுக்குச் சென்று பேசுகிறார்கள். அப்போது மயில்வாகனம், “எதற்காக என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று கேட்கிறார். அதற்கு கார்த்திக், “எனக்கும் சாமுண்டேஸ்வரிக்கும் இடையில ஒரு பழைய கதை இருக்கு” என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இதையடுத்து மயில்வாகனம் அங்கிருந்து கிளம்புகிறார்.

கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டேஸ்வரியின் பழைய ரகசியம் அம்பலம்! பகைக்கான காரணம் என்ன? | Karthigai Deepam Serial Today Episode 14 11 2026

25 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்:

இதற்கிடையில், ரேவதி கார்த்திக்குக்குப் போன் செய்து நடந்த விஷயங்களைச் சொல்கிறார். மேலும், இதைப் பற்றி அம்மாவிடமே நேரடியாகக் கேட்கப் போவதாகவும் கூறுகிறார். கார்த்திக்கும் போனிலேயே காத்திருக்க, ரேவதி சாமுண்டேஸ்வரியிடம் சென்று இந்த விஷயம் குறித்துக் கேட்கிறார். அப்போது சாமுண்டேஸ்வரி 25 வருடங்களுக்கு முன்பு நடந்த தன்னுடைய பழைய கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டேஸ்வரியின் பழைய ரகசியம் அம்பலம்! பகைக்கான காரணம் என்ன? | Karthigai Deepam Serial Today Episode 14 11 2026

அந்தக் காலத்தில் ஒரு நிறுவனத்தில் சாதாரண ஊழியராக வேலைக்குச் சேர்ந்த சாமுண்டேஸ்வரி, தன்னுடைய கடின உழைப்பாலும் திறமையாலும் படிப்படியாக முன்னேறி, கடைசியில் அந்த நிறுவனத்துக்கே உரிமையாளராக உயர்ந்திருக்கிறார்.

அந்தச் சமயத்தில்தான் லண்டனிலிருந்து அவருடைய நெருங்கிய தோழி ஸ்ரேயா வருகிறார். வந்ததும், “நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தம். கடந்த 4 வருஷமா யோகின்னு ஒருத்தரைக் காதலிச்சிட்டு இருக்கேன். அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நீ கண்டிப்பா நிச்சயதார்த்தத்துக்கு வரணும்” என்று சாமுண்டேஸ்வரியை அழைக்கிறார்.

தோழியின் வருங்காலக் கணவரின் உண்மை முகம்:

தோழியின் சந்தோஷத்துக்காக சாமுண்டேஸ்வரியும் நிச்சயதார்த்தத்துக்குச் செல்கிறார். ஆனால், அங்கேதான் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. சாமுண்டேஸ்வரியைப் பார்த்ததும் யோகிக்கு அவர் மீது தவறான எண்ணம் வருகிறது.

கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டேஸ்வரியின் பழைய ரகசியம் அம்பலம்! பகைக்கான காரணம் என்ன? | Karthigai Deepam Serial Today Episode 14 11 2026

“இவ ரொம்ப அழகா இருக்கா. எப்படியாவது இவளை அடையணும்” என்று யோகி தன்னுடைய நண்பர்களிடம் பேசுகிறார். இதை எதிர்பாராத விதமாக சாமுண்டேஸ்வரி கேட்டுவிடுகிறார். இதைக் கேட்டு அவர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

யோகிக்கு சரியான பதிலடி கொடுத்த சாமுண்டேஸ்வரி:

யோகியின் உண்மையான குணத்தைத் தெரிந்துகொண்ட சாமுண்டேஸ்வரி, உடனே இந்த விஷயத்தைத் தோழி ஸ்ரேயாவிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து அவர் இருக்கும் அறைக்குச் செல்கிறார்.

ஆனால், அங்கே போன பிறகுதான் இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஸ்ரேயாவிடம் தனியாக இருக்கும் யோகி, தன்னுடைய சுயரூபத்தைக் காட்டுகிறார். “நான் ஸ்ரேயாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா, எனக்குப் பிடிச்சது உன்னை மட்டும்தான். எப்படியாவது உன்னை அடையணும்” என்று யோகி தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி அத்துமீறிப் பேசுகிறார்.

கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டேஸ்வரியின் பழைய ரகசியம் அம்பலம்! பகைக்கான காரணம் என்ன? | Karthigai Deepam Serial Today Episode 14 11 2026

இதைக் கேட்ட சாமுண்டேஸ்வரிக்குக் கோபம் தலைக்கேறுகிறது. 25 வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த இந்தப் பழைய ரகசியம் இப்போது வெளியே வந்திருப்பதால், இனிமேல் ஸ்ரேயா, யோகி, சாமுண்டேஸ்வரி இடையே என்னென்ன பிரச்சனைகள் வெடிக்கப் போகின்றன? யோகியின் உண்மை முகம் ஸ்ரேயாவுக்குத் தெரிய வருமா? என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *