கமலின் அடுத்த படம் “சண்டியர்”.. மீண்டும் தொடங்கும் சர்ச்சை?

நடிகர் கமல்ஹாசன் அடுத்து இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது இன்று அறிவிக்கப்பட்டு என நேற்று தெரிவித்திருந்தனர்.

சண்டியர்

இந்த படத்திற்கு சண்டியர் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வந்து இருக்கிறது.

கமலின் அடுத்த படம்

2004 சர்ச்சை


கமல் நடிப்பில் 2004ல் வந்த விருமாண்டி படத்திற்கு முதலில் சண்டியர் என்று தான் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய காரணத்தினால் அந்த டைட்டிலை விருமாண்டி என கமல்ஹாசன் மாற்றினார்.


தற்போது அதே டைட்டிலை மீண்டும் கமல் கையில் எடுத்திருக்கிறார் என்பதால் சர்ச்சை மீண்டும் வருமா என பேச்சு சினிமா துறையில் எழுந்திருக்கிறது.

கமல் அவரது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தான் இந்த படத்தை எடுக்கிறார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைப்பது குறிப்பிடத்தக்கது. 

Gallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *