கார்த்திகை தீபம: வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சாமுண்டீஸ்வரி…

கார்த்திகை தீபம்

Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில் வியாழக்கிழமை எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடக்கின்றன.

கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சாமுண்டீஸ்வரி... அதிர்ச்சியில் கார்த்திக்! | Zee Tamizh Karthigai Deepam Serial Latest Epsiode



போலீசுடன் வந்த சந்திரகலா… அதிர்ச்சியில் சாமுண்டீஸ்வரி!



முந்தைய எபிசோடில் கார்த்திக் தலையிட்டு பிரச்சினையைச் சரிசெய்ததால், சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் நிம்மதியாகப் பேசிக்கொண்டிருந்தனர். காலையில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், சந்திரகலா மற்றும் சிவனாண்டி போலீசாருடன் வீட்டுக்கு வருகின்றனர்.



சாமுண்டீஸ்வரியை வெளியே அழைத்த அவர்கள், வீட்டுப் பத்திரத்தைக் காட்டி, “இந்த வீட்டை எங்களுக்கு எழுதிக் கொடுத்துட்டீங்க. இனிமே இந்த வீடு எங்களுக்குத்தான் சொந்தம். அதனால் உங்க பொருட்களை எடுத்துக்கிட்டு உடனே வீட்டைக் காலி பண்ணுங்க” என்று மிரட்டுகின்றனர்.

வேறு ஒரு விஷயத்துக்காக வாங்கிய கையெழுத்தை இப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதைப் பார்த்து சாமுண்டீஸ்வரி அதிர்ச்சியடைகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வாக்குவாதம் செய்தாலும், போலீசார் அதைக் கேட்கத் தயாராக இல்லை. “நீங்க இதைப் பற்றி நீதிமன்றத்துல போய் பேசிக்கோங்க. இப்போதைக்கு வீட்டை விட்டு வெளியேறுங்க” என்று கறாராகச் சொல்லிவிடுகின்றனர்.



கோவிலில் தஞ்சமடைந்த சாமுண்டீஸ்வரி குடும்பம்!



வேறு வழியில்லாமல் சாமுண்டீஸ்வரியும் அவரது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியேறி ஊர் கோவிலில் தங்குகின்றனர். இந்த விஷயம் கே.ஆர். இல்லத்தில் இருக்கும் கார்த்திக்கிற்கு மயில்வாகனம் மூலமாகத் தெரிய வருகிறது.


இதைக் கேட்டதும் அதிர்ச்சியடையும் கார்த்திக், உடனே கோவிலுக்குச் செல்கிறான்.

அங்கு இருக்கும் சாமுண்டீஸ்வரியிடம், “உங்களுக்கு இவ்வளவு பெரிய வீடு இருக்கும்போது ஏன் இப்படி கோவில்ல வந்து இருக்கீங்க? வாங்க, நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று அழைக்கிறான். ஆனால், சாமுண்டீஸ்வரியோ கார்த்திக்கின் அழைப்பை ஏற்காமல், அவன் வீட்டுக்குச் செல்ல முடியாது என்று உறுதியாக மறுத்துவிடுகிறார்.

வழக்கறிஞரின் ஆலோசனை… அடுத்த திட்டத்தில் இறங்கும் கார்த்திக்!



இதையடுத்து சாமுண்டீஸ்வரியைச் சமாதானப்படுத்திவிட்டு, மயில்வாகனத்துடன் ஒரு வழக்கறிஞரைச் சந்திக்கிறான் கார்த்திக். நடந்த விஷயங்கள் அனைத்தையும் கேட்டறிந்த வழக்கறிஞர், “சாமுண்டீஸ்வரி இந்த வீட்டைத் தன்னுடைய விருப்பத்தோடு எழுதிக் கொடுக்கவில்லை என்பதற்கு ஒரு வலுவான ஆதாரம் மட்டும் கிடைச்சா போதும். அதை வைத்து நீதிமன்றத்துல வழக்கை எளிதாக வெல்லலாம்.

அப்படி ஒரு ஆதாரம் கிடைக்கலைன்னா இந்த வழக்கு பல வருஷங்கள் கூட இழுக்கலாம்” என்று ஆலோசனை சொல்கிறார்.


பின்னர் வீட்டுக்குத் திரும்பும் கார்த்திக், பாட்டியிடம் சென்று சாமுண்டீஸ்வரி கோவிலில் தங்கியிருப்பதையும், வீட்டுக்கு வர மறுத்துவிட்டதையும் சொல்லி வருத்தப்படுகிறான்.

இதனுடன் இந்த எபிசோட் நிறைவடைகிறது.


இனி சந்திரகலாவின் இந்தச் சதியை கார்த்திக் எப்படி முறியடிக்கப் போகிறான்? வீட்டை மீட்டு மீண்டும் சாமுண்டீஸ்வரியிடம் ஒப்படைப்பானா? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *