பொங்கல் ரேஸில் குவியும் படங்கள், முந்துவது யார்?
பொங்கல் ரிலீஸ்
பொங்கல் தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகை.
அதை விட 3 நாட்களுக்கு மேல் விடுமுறை வரும் பண்டிகை. இந்த பண்டிகையை சினிமாகாரர்கள் யாரும் தவறவிட மாட்டார்கள்.
எப்படியாவது தங்கள் படங்களை ரிலிஸ் செய்து விட வேண்டும் என போட்டி போடுவார்கள்.
அந்த வகையில் பொங்கல் விருந்தாக பிரமாண்டமாக வரவிருந்த தர்மன் படம் தற்போது தள்ளி போனதால் பல படங்கள் பொங்கலுக்கு குவிந்து வருகின்றன.
இதில் விஷாலின் புருஷன், ரஞ்சித்தின் வேட்டுவம் வருவதாக இருக்க, தற்போது விஜே சித்து டயங்கரம் படமும் பொங்கலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது,
ஆனால் இதெல்லாம் விட அஜித்தின் கிளாடியேட்டர் டாக்குமெண்ட்ரி பொங்கல் விருந்தாக வரவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
அதில் முதல்வர் விஜய் புட்டேஜ் இருப்பதால் கண்டிப்பாக பிரமாண்ட ஓப்பனிங் வரும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை, தற்போது இந்த ரேஸில் யார் விலகுவார்கள், யார் அதிக தியேட்டர் பிடிப்பார்கள் என்பது தான் எல்லோரின் எதிர்பார்ப்பும்.
