ஜெயிலர் 2ல் மோகன்லால் காட்சிகள் நீக்கம்.. கொந்தளிக்கும் காஸ்டியூம் டிசைனர்
சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று ஜெயிலர் 2 படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது.
அதிகம் எதிர்பார்ப்பில் இருந்த ரஜினி ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் விமர்சனங்கள் படத்திற்கு கலவையாக தான் வந்துகொண்டிருக்கிறது.
இந்த படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கும் நிலையில், அவரது காஸ்டியூம் டிசைனர் காட்டமாக போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி இருக்கிறது.
காட்சிகள் நீக்கம்
மோகன்லாலின் காட்சிகள் பல ஜெயிலர் 2ல் இருந்து நீக்கப்பட்டதாக கூறி இருக்கும் அவர், அவரது இரண்டு லுக் முழுமையாக நீக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.
”
நமது சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலை என்றால், இனி இதுபோல sequel வந்தால் நான் நிச்சயம் பணியாற்றமாட்டேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த பதிவு வைரல் ஆன நிலையில் தற்போது மோகன்லால் ரசிகர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
