மெகா ஹிட் இயக்குனரின் ஃபேண்டஸி படத்தில் நயன்தாரா
நயன்தாரா
நயன்தாரா இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாகிவிட்டார். இவர் தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே பால்லிவுட் கிங்கான் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து அசத்தினார். இந்நிலையில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து நீண்ட காலம் ஆகிவிட்டது.
ஃபேண்டஸி படம்
இதனால் எப்போது மீண்டும் லேடி சூப்பர்ஸ்டாராக சோலோ ஹீரோயின் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டிமாண்டி காலனி இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு ஃபேண்டஸி படத்தில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
மேலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏற்கனவே நயன்தாரா இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
