பணம் கொடுத்து அதை வாங்க முடியாது.. வெளியில் வந்த குமரன் வெளியிட்ட வீடியோ
விஜய் டிவியில் பிக் பாஸ் பத்தாவது சீசன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியில் வழக்கம் போல போட்டியாளர்கள் இடையே சண்டை, வாக்குவாதம், மோதல் என பரபரப்பாகவே ஷோ சென்று கொண்டிருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகர் குமரன் பிக் பாஸ் 10ல் போட்டியாளராக வந்த நிலையில் சமீபத்தில் பணப்பெட்டியுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். அவர் 5 லட்ச ரூபாய் பணத்தோடு கிளம்பியது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீடியோ
இந்நிலையில் தற்போது குமரன் வெளியில் வந்த பின் வீடியோ வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து இருக்கிறார்.
“ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஆதரவளித்த மக்களுக்கு நன்றி. நான் வெளியில் வந்து பார்க்கும் போது தான் எனக்கு தெரிகிறது.
எனக்கு எந்த அளவிற்கு நீங்கள் ஆதரவு கொடுத்து வந்திருக்கிறீர்கள் என்பது தெரியும். சிரியலில் என்னை பார்த்து ரசித்த ரசிகர்கள் ஆதரவளித்தது மட்டுமின்றி, என்னை யார் என்றே தெரியாதவர்கள் கூட எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி.
பணம் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கி விடலாம். ஆனால் மக்கள் அன்பை வாங்கி விட முடியாது” என குமரன் பேசி இருக்கிறார். வீடியோவை பாருங்க.
