ரஜினியுடன் முதல் முறையாக இணைந்த நடிகை ஸ்ரீலீலா..
Sreeleela Joins Rajinikanth Dharman Movie: நடிகை ஸ்ரீலீலா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்மன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்மன்
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான டிராகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது. இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த அஸ்வத், அடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்புவின் படத்தை இயக்க கமிட்டானார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க வாய்ப்பு அஸ்வதை தேடி வந்தது.
சிம்பு தற்போது அரசன் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் காரணத்தால், அதற்குள் தர்மன் படப்பிடிப்பு முடித்துவிட திட்டமிட்டார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.
கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் தர்மன் படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து சிம்ரன், ராஷி கண்ணா நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டனர்.
இதன்பின், இப்படத்தில் ராம் பொதினேனி தர்மன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சில தகவல்கள் இணையத்தில் உலா வந்தன.
ஆனால், இதுகுறித்து தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன் மைசூரில் நடைபெற்ற தர்மன் படப்பிடிப்பில் நடிகர் ராம் பொதினேனி கலந்துகொண்டார். அந்த புகைப்படத்தை கூட நடிகை ராஷி கண்ணா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலீலா
ராம் இப்படத்தில் நடிப்பது உறுதியான நிலையில், தற்போது அனைவருக்கும் சர்ப்ரைஸ் தரும் வகையில் இப்படத்தில் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலாவும் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மைசூர் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீலீலா கலந்துகொண்டதாகவும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்தான் இப்படத்தில் இவர் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
