இது என்ன புது கதை.. கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ பார்த்து புலம்பும் ரசிகர்கள்


ஒருகாலத்தில் சன் டிவியில் நம்பர் ஒன் சீரியல்களில் ஒன்றாக இருந்த தொடர் கயல். ஆனால் சமீப காலமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதற்கு காரணம் அந்த சீரியல் கதை சென்று கொண்டிருக்கும் டிராக் தான்.

எழில் கோமாவில் இருக்கும் நிலையில் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் கயல் திணறிக் கொண்டிருப்பது போல நீண்ட காலமாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.


இந்நிலையின் தற்போது கதையில் ஒரு புது டிவிஸ்ட் வந்திருக்கிறது.

இது என்ன புது கதை.. கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ பார்த்து புலம்பும் ரசிகர்கள் | Kayal Serial Next Week Promo Kayal As Mla

எம்எல்ஏ கயல்


கயல் தைரியமான பெண் என்பதால் அவரை எம்எல்ஏ தேர்தலில் போட்டியிடும்படி எல்லாரும் வந்து பேசுகிறார்கள். அதற்கு முதலில் கயல் மறுப்பு கூற, அவரது அம்மா உடனே தனியாக அழைத்து சென்று, அவருக்கு சில வார்த்தைகளை சொல்லி ஏற்றுக் கொள்ள வைக்கிறார்.

கயல் சீரியல் கிளைமாக்ஸ் விரைவில் வர இருப்பதாக தகவல் வந்த நிலையில், இது என்ன புது கதையா இருக்கு என சீரியல் ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகிறார்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *