அடேங்கப்பா பிக்பாஸ் 10ல் இப்படியொரு டுவிஸ்ட்டா… இத யாரும் எதிர்ப்பார்க்கலயே…
பிக்பாஸ் 10
பிக்பாஸ் 10, விறுவிறுப்பின் உச்சமாக அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியாமல் ரசிகர்களை ஆர்வமாக பார்க்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.
பிக்பாஸ் 10வது சீசன் ஆரம்பித்த நாள் முதல் ஒரே பிரச்சனை, சண்டை தான். அண்மையில் Leader Exit Poll மூலம் லட்சுமி ப்ரியா பிக்பாஸ் 10 வீட்டைவிட்டு அனுப்பப்பட்டது குறித்து பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதிகப்படியானோர் லட்சுமி ப்ரியாவை வெளியே அனுப்பியது Unfair எவிக்ஷன் என கமெண்ட் செய்து வந்தனர்.
டுவிஸ்ட்
லட்சுமி ப்ரியா இந்த வாரம் வெளியேறியதை தொடர்ந்து எலிமினேஷன் இருக்காது என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் ஆனந்தி இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது, எலிமினேஷன் இல்லை அவரது தந்தை இறந்துவிட்டதாக கூறப்படுகிறது, அதனால் அவர் வெளியேறினார் என்கின்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் 10 சீசனில் ஏற்பட்டுள்ள டுவிஸ்ட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இதற்கு முன் பிக்பாஸ் 10 வீட்டைவிட்டு வெளியேறிய சாவின்யா, ஜாவத் மற்றும் லட்சுமி ப்ரியா மீண்டும் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
