இயக்குநர் அட்லீயின் சொத்து மதிப்பு.. முழு விவரம்

Director Atlee Kumar Net worth in 2026 Details: இந்திய சினிமாவில் டாப் 10 இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் அட்லீயின் பிறந்தநாளான இன்று, அவருடைய சொத்து மதிப்பு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

அட்லீ

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே வெற்றி பெற்ற இவர், அதை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து தெறி படத்தை இயக்கினார். இதன்பின், மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார்.

Director Atlee Net worth: இயக்குநர் அட்லீயின் சொத்து மதிப்பு.. முழு விவரம் | Director Atlee Net Worth 2026

ஜவான்

தென்னிந்திய அளவில் வசூல் மன்னனாக வலம் வந்த அட்லீ, பாலிவுட் பக்கம் சென்று, கிங் கான் ஷாருக்கானை வைத்து இயக்கிய படம் ஜவான். இப்படம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக அட்லீ மாறினார்.

Director Atlee Net worth: இயக்குநர் அட்லீயின் சொத்து மதிப்பு.. முழு விவரம் | Director Atlee Net Worth 2026

ராக்கா

ஜவான் வெற்றிக்கு பின் இயக்குநர் அட்லீ யாரை வைத்து அடுத்ததாக படம் இயக்கப்போகிறார் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அல்லு அர்ஜுனுடன் ராக்கா திரைப்படத்திற்காக இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

Director Atlee Net worth: இயக்குநர் அட்லீயின் சொத்து மதிப்பு.. முழு விவரம் | Director Atlee Net Worth 2026

பிறந்தநாள்

பான்-இந்தியன் ஸ்டார் இயக்குநராக உள்ள அட்லீக்கு இன்று பிறந்தநாள். தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடும் அட்லீக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அட்லீயின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Director Atlee Net worth: இயக்குநர் அட்லீயின் சொத்து மதிப்பு.. முழு விவரம் | Director Atlee Net Worth 2026

சொத்து மதிப்பு

பிரம்மாண்ட இயக்குநர் அட்லீ இன்று இந்திய சினிமாவில் முக்கிய புள்ளியாக உள்ளார். இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 200 கோடி முதல் ரூ. 250 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர் தற்போது இயக்கி வரும் ராக்கா படத்திற்காக ரூ. 100 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Director Atlee Net worth: இயக்குநர் அட்லீயின் சொத்து மதிப்பு.. முழு விவரம் | Director Atlee Net Worth 2026

பொறுப்பு துறப்பு: இயக்குநர் அட்லீயின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், பல்வேறு இணையதளங்களில் உள்ள தகவலாகும். இது, சினிஉலகத்தின் சொந்த கருத்தோ அல்லது அதிகாரப்பூர்வமான தகவலோ அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *