அஜித்தின் Dare Devil படத்தில் இருந்த வெளியேறிய மோகன்லால்…
அஜித்
கடந்த வருடம் நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது.
விடாமுயற்சி கொஞ்சம் சொதப்ப குட் பேட் அக்லி படு மாஸ் வெற்றியை அடைந்தது. இப்படத்தை தொடர்ந்து படங்கள் நடிப்பதை கொஞ்சம் நிறுத்தி தனது கனவை நோக்கி பயணித்து வந்தார் அஜித். சமீபத்தில் அஜித்குமார் பங்கேற்ற சில்வர்ஸ்டோன் சர்கியூட் கார் பந்தயத்தை விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் இருவரும் கட்டித் தழுவிக் கொள்ள ரசிகர்கள் அந்த புகைப்படங்களை கொண்டாடினார்கள்.
டேர் டெவில்
கார் ரேஸில் தனது முழு கவனத்தை போட்டுள்ள அஜித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
குட் பேட் அக்லி பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் டேர் டெவில் என்ற படத்தில் நடிக்க அப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்க உள்ளார். வரும் நவம்பர் 2ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவித்துள்ளார்கள்.
இந்த படத்தில் முக்கிய ரோல்களில் மலையாள சினிமா நடிகர் மோகன்லால் மற்றும் லேட்டஸ்ட் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவருமே தேதி பிரச்சனை காரணமாக வெளியேறியுள்ளார்களாம்.
மோகன்லால் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கன்னட சினிமா நடிகர் சுதீப்பிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
