6 நாட்களில் தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் நடிகர் சூரியின் மண்டாடி… வசூல் விவரம்…


மண்டாடி

அறிமுக இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வெளியான திரைப்படம் மண்டாடி.

சூரியுடன், மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

படகு போட்டியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிக்க சூரிக்கு ரூ. 20 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது, அதேபோல் நாயகியாக நடித்த மஹிமா நம்பியாருக்கு ரூ. 1 கோடி சம்பளம் என்றும் தகவல்கள் வருகின்றன.

பாக்ஸ் ஆபிஸ்

இப்படம் வெளியாகி 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 65 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமே இப்படம் இதுவரை ரூ. 42 கோடிகளுக்கு மேல் வசூல் வேட்டை செய்து சூப்பர் ஹிட்டான படமாகியுள்ளது.

நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வரும் நிலையில் விரைவில் படம் ரூ. 100 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *