4 நாட்களில் சர்தார் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த சர்தார் 2 திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சர்தார் 2

2022-ல் வெளிவந்த சர்தார் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் வெளிவந்தது சர்தார் 2. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

4 நாட்களில் சர்தார் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Sardar 2 Movie Worldwide Box Office Collection

மேலும் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, நிழல்கள் ரவி, ஆஷிஷ் வித்யார்த் ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

4 நாட்களில் சர்தார் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Sardar 2 Movie Worldwide Box Office Collection

பாக்ஸ் ஆபிஸ்

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வெளியான சர்தார் 2, ரசிகர்களிடையே வரவேற்பை பெற தவறிவிட்டது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வசூல் வரவில்லை. இந்த நிலையில், 4 நாட்களில் சர்தார் 2 உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 4 நாட்களில் ரூ. 16 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

4 நாட்களில் சர்தார் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் | Sardar 2 Movie Worldwide Box Office Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *