ஒற்றை காலில் நிற்க வைத்து தண்டனை கொடுத்த சாமந்தி – சாமந்தி இன்றைய எபிசோட் அப்டேட்
சாமந்தி
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சாமந்தி.
சீரியலின் நேற்றைய எபிசோடில் வெள்ளைக்காரர்கள் வீட்டை விட்டு கிளம்பியதும் அரசி கோபமாக வீட்டுக்குள் வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது அரசி ஒரு மேட்டை கொண்டு வந்து ஹாலில் போட சொல்கிறாள். பிறகு சாமந்தியை அதன் மீது நிற்க சொல்ல சாமந்தி நிற்பது தானே அதெல்லாம் சாதாரணம் என நிற்க அரசி ஒற்றைக்காலில் நிற்க வேண்டும் என அதிர்ச்சி கொடுக்கிறாள்.
இரவு முழுவதும் இப்படியே நிற்க வேண்டும், ரோபோ நீ நோட்டமிட்டு கொண்டே இருக்க வேண்டும் என ரோபோவுக்கு கட்டளை இட்டுவிட்டு கிளம்பி செல்கிறாள்.
ஒற்றைக்காலில் சாமந்தி நிற்க முடியாமல் தவித்தபடி நிற்க அர்ஜுன் யாரும் இல்லாத சமயத்தில் உள்ளே வந்து அவ ரொம்ப பாவம் அவளுக்கு கொஞ்சம் உதவி பண்ணலாமா என்று கேட்க ரோபோ சாமந்தி ரொம்ப நல்லவள். நீ அவளுக்கு உதவி பண்ணு..
மேடமிடம் நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்று சொல்ல அர்ஜுன் தனது காலை பிடித்து சாமந்திக்கு முட்டுக் கொடுத்து உதவுகிறான்.
பிறகு அரசி கீழே இறங்க ரோபோ மேடம் கம்மிங் என்று சத்தமிட அர்ஜுன் இங்கிருந்து ஓடி ஒளிந்து கொள்கிறான்.
பிறகு அரசி வந்ததும் ரோபோ சாமந்தி இரவு முழுவதும் ஒற்றைக்காலில் நின்று கொண்டே இருந்ததாக பொய் சொல்ல சாமந்தியும் டயர்டில் மயங்கி விழப் போக அரசி பொழச்சி போட்டும் என மன்னிக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சாமந்தி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
