3வது திருமண நாளை மனைவி, குழந்தையுடன் கொண்டாடிய நாஞ்சில் விஜயன்… புகைப்படங்கள் இதோ
நாஞ்சில் விஜயன்
நடிகர், நகைச்சுவை கலைஞர், பட்டிமன்ற பேச்சாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக தன்னை நிரூபித்து வருபவர் தான் நாஞ்சில் விஜயன்.
தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் தனது திறமைகளை காட்டிவந்த நாஞ்சில் விஜயன் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பு பதிவு போட்டார். அதாவது தனது திருமண வாழ்க்கையில் தோற்றுவிட்டேன், என் மனைவியை பிரிந்து தனிமையாக வந்துவிட்டேன் என பதிவு போட்டிருந்தார்.
அதோடு திருநங்கை வைஷ்ணவியின் சாபம் பழித்துவிட்டது என குறிப்பிட்டிருந்தார். அவரின் பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பரவ விமர்சனம் செய்யப்பட்டது.
ஆனால் அவரது பதிவு மிகப்பெரிய அளவில் சர்ச்சையானதால் உடனடியாக அந்த பதிவை நீக்கிவிட்டார்.
கொண்டாட்டம்
நாஞ்சில் விஜயன் மனைவியை பிரிந்துவிட்டாரா என அவரது நலம் விரும்பிகள் வருத்தப்பட இப்போது சந்தோஷப்படும் அளவிற்கு ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதாவது நாஞ்சில் விஜயன் தனது 3வது திருமண நாளை மனைவி மற்றும் மகளுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
