ரஜினியை எதேச்சையாக சந்தித்த கயாடு லோஹர்.. கனவு மாதிரி இருக்கு! பூரிப்புடன் சொன்ன விஷயம்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மற்ற நடிகர் நடிகைகளே பலரும் அவருக்கு ரசிகர்கள் ஆக இருக்கின்றனர்.
இன்று நடிகை ஸ்ரேயா சரண் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டிருந்தார். அதனால் அவர் தர்மன் படத்தில் நடிக்கிறாரா என கேள்வி எழுந்தது.
இதை தொடர்ந்து தற்போது இளம் நடிகை கயாடு லோஹர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
விமானத்தில் எதேச்சையாக ரஜினிக்கு அருகில் அவருக்கு சீட் அமைந்து விட்டதாம். அதை பற்றி நெகிழ்ச்சியாக அவர் போட்டோவுடன் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
“இது கனவு போல இருக்கிறது” என கூறியிருக்கிறார்.
“இது நடந்தது என என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் அவரைப் பார்த்ததும் சுந்தரி பாடல் தான் என்னுடைய மனதில் ஒலித்தது. சற்றும் எதிர்பார்க்காத ஒரு அற்புதமான தருணம், என்னுடைய நாள் சிறப்பானது.
ஒரு நாள் அவருடன் நிச்சயம் திரையில் நடிப்பேன் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என கயாடு லோஹர் கூறியிருக்கிறார்.
