‘மிகவும் சிறப்பாக பணியை செய்து வருகிறார்’.. முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய நடிகை ஸ்ரேயா சரண்

பிரபல நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சர் விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், 2024-ஆம் ஆண்டு கட்சியை தொடங்கி மக்களின் பேராதரவோடு இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துவிட்டார். திரையுலக பிரபலங்கள் பலரும் விஜய்யின் ஆட்சி குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பிரபல நடிகை ஸ்ரேயா சரண் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி குறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
ஸ்ரேயா ஓபன் டாக்
அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மிகவும் சிறப்பாக பணியை செய்து வருகிறார். மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், எளிமையாகவும், இயல்பாகவும் இருக்கிறார். மக்களுக்கு தேவையானவை என்ன என்பதை நேரடியாக தொடர்புகொண்டு அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார். மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்துடன் அவர் செயல்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறினார்.
மேலும் பேசிய அவர், “இனி வரும் காலங்களிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்யின் பயணம் மிகவும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார். முதல்வர் குறித்த நடிகை ஸ்ரேயா சரணின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






