மெகா ஹிட் இயக்குனர் படத்தில் இணையும் ருக்மிணி வசந்த், ஹீரோ இவர்தானா?

ருக்மிணி வசந்த்
தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் ஒன் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது டாக்சிக், ட்ராகன் போன்ற பிரம்மாண்ட படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மெகா ஹிட் இயக்குனர்
தற்போது கிடைத்த தகவலின்படி இவர் அடுத்து புஷ்பா என்ற மெகா ஹிட் படத்தை அளித்த சுகுமார் அவர்களின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
அதோடு இப்படத்தில் இவர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ருக்மிணி தான் இன்னும் சில வருடங்கள் தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகையாக வலம் வருவார் என கூறப்படுகிறது.






