ரீஎன்ட்ரி கொடுத்த கெனிஷா.. ரவி மோகன் விவாகரத்து வழக்குக்கு நடுவில் போட்ட பதிவு

நடிகர் ரவி மோகனின் விவாகரத்து வழக்கு சமீபத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியது. மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என ஆர்த்தி கேட்க, நீதிமன்றம் 3 லட்சம் ருபாய் மட்டுமே ஜீவனாம்சமாக தர உத்தரவிட்டுள்ளது.
மகன்களில் பள்ளி கட்டணம் உள்ளிட்டவற்றை ரவி மோகன் தான் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியிருப்பதாக ஆர்த்தியின் அம்மா பேட்டி கொடுத்தார்.
கெனிஷா ரீஎன்ட்ரி
இந்நிலையில் ரவி மோகனின் தோழி கெனிஷா சமீபத்தில் அவரை விட்டு பிரிவதாக தெரிவித்து, சென்னையை விட்டு போவதாகவும் கூறி இருந்தார். மேலும் அவர் சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகி இருந்தார்.
தற்போது கெனிஷா மீண்டும் இன்ஸ்டாகிராமில் ரீஎன்ட்ரி கொடுத்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
“அமைதியான மனதுடன் மீண்டும் வருகிறேன், ஆழமான காரணத்துடன்..” என அவர் குறிப்பிட்டுள்ளார்.






