உயர் நீதிமன்றம் சென்ற நடிகை ஸ்ருதி ஹாசன்.. ரூ. 15 கோடி இழப்பீடு கேட்கு வழக்கு

தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து ரூ. 15 கோடி இழப்பீடு வழங்க கோரி நடிகை ஸ்ருதி ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஸ்ருதி ஹாசன்
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் தனது பெயர், படம், உருவம், குரல் மற்றும் ஆளுமை உரிமைகளை பாதுகாக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
AI, டீப்ஃபேக்
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது மனுவில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது முகத்தை மார்பின் செய்து ஆபாசமான முறையில் புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வைரலாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அனுமதியின்றி பெயர் மற்றும் படத்தைப்பயன்படுத்தி இணையத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், போலி விளம்பரங்களும் வெளியிடப்படுவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ரூ. 15 கோடி இழப்பீடு
தனது அடையாளத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியவர்களிடம் இருந்து ரூ. 15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், இதுபோன்ற செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபகாலமாக AI மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகளின் முகத்தை மார்பின் செய்து ஆபாசமான முறையில் புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகின்றன. இதனை கண்டித்து பல நடிகைகள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகை மிருணாள் தாகூர் கூட தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






