ரேவதி காட்டிய வீடியோவால் கொதித்த சந்திரகலா.. கார்த்தி – ரேவதியை பிரிக்க புதிய சதி! – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

ரேவதி காட்டிய வீடியோவால் கொதித்த சந்திரகலா.. கார்த்தி – ரேவதியை பிரிக்க புதிய சதி! – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்


கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ‘கார்த்திகை தீபம்’ சீரியல், திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ரசிகர்களை விறுவிறுப்பாக கவர்ந்து வருகிறது.


கடந்த எபிசோடில் பஞ்சாயத்தில் வைத்து சிவனாண்டி மற்றும் முத்துவேலுக்கு தலா 50 சவுக்கடி வழங்கப்பட்ட நிலையில், இன்று கதைக்களம் புதிய பரபரப்பை நோக்கி நகர்கிறது.

மயில்வாகனம் அனுப்பிய வீடியோவை கையில் வைத்துக்கொண்டு ரேவதி நேரடியாக சந்திரகலாவை சந்திக்கிறாள்.

ரேவதி காட்டிய வீடியோவால் கொதித்த சந்திரகலா.. கார்த்தி - ரேவதியை பிரிக்க புதிய சதி! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Karthigai Deepam 2 Serial Episode

சிவனாண்டி சவுக்கடி வாங்கும் காட்சிகளை அவளிடம் காட்டி, மறைமுகமாக வெறுப்பேற்றுகிறாள். அந்த வீடியோவை பார்த்த சந்திரகலா அதிர்ச்சியடைந்து, “என்ன இப்படி மாட்டை அடிப்பது போல அடிக்கிறார்கள்!” என பதற்றப்படுகிறாள்.


ஆனால் அதற்கும் ரேவதி பதிலடி கொடுக்கத் தயங்கவில்லை. “தப்பு பண்ணினா தண்டனை இப்படித்தான் இருக்கும்… அவரை கொஞ்சம் அடங்கி இருக்கச் சொல்லுங்க!” என்று கூறி, சந்திரகலாவின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள்.

ரேவதி சென்ற பிறகும் வீடியோவின் தாக்கத்தில் இருந்து மீள முடியாத சந்திரகலா, நேராக சிவனாண்டியை சந்திக்கிறாள்.

அவனது காயங்களைக் கண்டு மனம் உடையும் அவள், வருத்தத்துடன் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்து ஆறுதல் கூறுகிறாள். இதனால் சிவனாண்டிக்கும் சந்திரகலாவுக்கும் இடையிலான பாச பந்தம் மேலும் வலுப்படுகிறது.

ரேவதி காட்டிய வீடியோவால் கொதித்த சந்திரகலா.. கார்த்தி - ரேவதியை பிரிக்க புதிய சதி! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Karthigai Deepam 2 Serial Episode


மறுபக்கம் ரேவதி கோவிலுக்கு செல்கிறாள். அங்கு தம்பதியர் ஒருவர் சிறப்பு பூஜை செய்வதை கவனித்த அவள், அதைப்பற்றி ஆர்வமாக விசாரிக்கிறாள்.

பின்னர் கார்த்தியை சந்தித்து, “நாமும் கணவன்-மனைவியாக இந்த பூஜையை சேர்ந்து செய்யலாமே” என விருப்பத்தை தெரிவிக்கிறாள்.

ஆனால் கார்த்திக் அதற்கு உடனே சம்மதிக்கவில்லை. “இப்படிப்பட்ட விஷயங்களில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை” என்று கூறி ஒதுங்க முயல்கிறான்.

இருப்பினும் ரேவதி விடாமல், கார்த்தியை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயற்சி செய்கிறாள்.

இதற்கிடையில், கார்த்தி மற்றும் ரேவதி ஒன்றாக இருப்பதை பார்த்த சந்திரகலாவின் மனதில் புதிய திட்டம் உருவாகிறது. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி, இருவரையும் சாமுண்டீஸ்வரியின் கண்களில் தவறாக காட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறாள்.

ரேவதி காட்டிய வீடியோவால் கொதித்த சந்திரகலா.. கார்த்தி - ரேவதியை பிரிக்க புதிய சதி! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Zee Tamizh Karthigai Deepam 2 Serial Episode

அதற்காக இருவரின் சந்திப்பை சாமுண்டீஸ்வரிக்கு தெரியப்படுத்த திட்டம் தீட்டுகிறாள்.

*ரேவதியின் சந்தோஷத்தில் சந்திரகலா புயலை கிளப்பப் போகிறாளா? சாமுண்டீஸ்வரி அறிந்தால் என்ன நடக்கும்? கார்த்தி – ரேவதி உறவில் புதிய பிரச்சனை வெடிக்குமா?**

பரபரப்பான இந்த திருப்பங்களை காண, ‘கார்த்திகை தீபம்’ சீரியலை திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு Zee தமிழில் தவறாமல் பாருங்கள்! 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *