திடீரென விஜய்யின் பட காட்சிகள் ரத்து… ரசிகர்கள் ஷாக்

திடீரென விஜய்யின் பட காட்சிகள் ரத்து… ரசிகர்கள் ஷாக்


ஜனநாயகன்

பல போராட்டங்களுக்கு பிறகு விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜுலை 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

பொங்கலுக்கு வர வேண்டிய படம் ஆனால் விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் ரிலீஸ் நாளையே பொங்கலாக கொண்டாடினார்கள்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே என பலர் நடித்த இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்திருந்தார்.

விஜய்யின் அரசியல் என்ட்ரி நேரத்தில் படம் வெளியாகி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் புலம்பியுள்ளார்கள்.

திடீரென விஜய்யின் ஜனநாயகன் பட காட்சிகள் திரையரங்கில் ரத்து... ரசிகர்கள் ஷாக் | Vijay Jananayagan Movie Show Stopped


காட்சிகள் ரத்து


படம் வெளியாகி நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்துவரும் நிலையில் தற்போது விஜய்யின் ஜனநாயகன் பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகம்-கர்நாடகா இடையே காவிரி தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் போராட்டம் வெடித்துள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் காவிரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பசவேஸ்வரா திரையரங்கில் ஜனநாயகன் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திரையரங்கை கன்னட அமைப்புகள் முற்றுகையிடப் போவதாக கிடைத்த தகவலையொட்டி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *