8 நாள் முடிவில் விஜய்யின் ஜனநாயகன் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்… எத்தனை கோடி?

ஜனநாயகன்
விஜய்யின் கடைசிப் படம் என்று நினைக்கும் போது பலர் அழுதுள்ளனர். விஜய்யே கூட 69வது படம் தான் தனது கடைசிப்படம் என எழுதும் போது கஷ்டப்பட்டதாக கூறியதாக கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அவரைப் போல விஜய் ரசிகர்கள் அவர் இனி நடிக்க மாட்டார் என்பதை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
எல்லா விஷயத்திலும் போராடி வரும் விஜய்க்கு அவரது கடைசிப்படமும் வெளியாவதில் பெரிய போராட்டமாக அமைந்துவிட்டது.
ஆனால் எப்படியோ படம் கடந்த ஜுலை 23ம் தேதி வெளியாகிவிட்டது, ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளிலேயே ரூ. 90 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்திய இப்படத்திற்கு நாளுக்கு நாள் கலெக்ஷனும் கூடிக்கொண்டே வருகிறது.
தமிழகத்தில் மட்டுமே 8 நாள் முடிவில் ஜனநாயகன் படம் ரூ. 108 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.






