1 வருடத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங்… என்ன தெரியுமா?

ரகுல் ப்ரீத் சிங்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
35 வயதாகும் ரகுல் ப்ரீத் சிங் கடந்த 2024ம் ஆண்டு ஜேக்கி பாக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சில நடிகைகள் நடிக்க வருவது கிடையாது, ஆனால் ரகுல் ப்ரீத் சிங் அப்படி இல்லை, தொடர்ந்து படங்கள் நடித்த வண்ணம் உள்ளார்.
ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகியுள்ள ராமாயணா படத்தில் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் நடித்துள்ளார்.
லேட்டஸ்ட்
படங்களில் பிஸியாக உள்ள ரகுல் இப்போது ஜிம் ஒர்க் அவுட்டில் இறங்கியுள்ளார்.
அதாவது ஒரு வருடம் முன்பு அவரது உடம்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜிம் பக்கம் வராமல் இருந்தாராம்.
தற்போது சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சரியாகியுள்ள நிலையில் மீண்டும் ஜிம் ஒர்க்அவுட்டில் இறங்கியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.






