இந்திய படங்களுக்கு இணையான வசூல் செய்யும் தி ஒடிசி…

தி ஒடிசி
ஒவ்வொரு மொழியிலும் ஒரு இயக்குனர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வார்.
அப்படி ஹாலிவுட்டில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படங்கள் இயக்கி மக்களின் பேவரெட் இயக்குனராக இருப்பவர் தான் கிறிஸ்டோபர் நோலன்.
இவரது படங்களுக்கு ஹாலிவுட்டை தாண்டி மற்ற நாடுகளிலும் நல்ல வரவேற்பு பெறும், இந்தியாவில் கூட அவர் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
எப்போதும் வித்தியாசமான கதைக்கொண்ட படங்களை இயக்கும் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஜுலை 17ம் தேதி வெளியான திரைப்படம் தான் தி ஒடிசி.
ரிலீஸ் ஆன நாள் முதல் ரசிகர்களிடம் அதிகம் பேசப்படும் இப்படம் 5 நாள் முடிவில் இந்தியாவில் ரூ. 96 கோடி வரை வசூலை எட்டியுள்ளது, இன்று எப்படியும் ரூ. 100 கோடியை எட்டியிருக்கும் என கூறப்படுகிறது.






