பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் 'தி ஒடிசி'.. இதுவரை இத்தனை கோடியா

பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் 'தி ஒடிசி'.. இதுவரை இத்தனை கோடியா

‘தி ஒடிசி’

பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘தி ஒடிசி’. இப்படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார்.

ட்ரோஜன் போருக்குப் பிறகு, இத்தாக்காவின் (Ithaca) கிரேக்க மன்னரான ஒடிஸியஸ் பல ஆபத்தான தடைகளை கடந்து, தனது சொந்த நாட்டிற்கு திரும்பவும், தன் மனைவியான பெனிலோப்பை சந்திக்கவும் மேற்கொள்ளும் நீண்ட பயணத்தை மையமாக வைத்துத்தான் இப்படத்தின் கதையை நோலன் உருவாக்கியுள்ளார்.

வசூல்

இப்படம் குறித்து சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இப்படத்தின் வசூல் பட்டையை கிளப்பி வருகிறது. திரையரங்குகளில் ‘தி ஒடிசி’ திரைப்படத்தை மக்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், வசூல் வேட்டையாடி வரும் ‘தி ஒடிசி’ திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 2500 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு ஓப்பனிங் வாரத்தில் கிடைத்துள்ள அமோக வரவேற்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *