5 நாட்களில் உலகளவில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இதயம் முரளி
புதிதாக வெளியாகும் திரைப்படங்களின் வசூல் விவரங்களை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், கடந்த வாரம் வெளியான இதயம் முரளி திரைப்படத்தின் வசூல் விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கர் இயக்கி தயாரித்து, அதர்வா முரளி ஹீரோவாக நடித்த படம் இதயம் முரளி. அதர்வாவின் தந்தையும் மறைந்த பிரபல நடிகருமான முரளியின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றிபெற்ற ‘இதயம்’ திரைப்படத்தின் தலைப்பை இப்படத்தில் வைத்துள்ளனர். இதுவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உருவாக்கியது.
இப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், சுதாகர், டிராவிட், பகத் பாசில், தமன், நிஹாரிகா, ஏஞ்சலின், நட்ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிப்பை தாண்டி இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் விவரம்
ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இதயம் முரளி திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. விமர்சன ரீதியாக பின்னடைவு இருந்தாலும், வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இதயம் முரளி திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






