வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்.. "தமிழ்முருகன்" டீஸர் வைரல்

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் மீண்டும் கூட்டணி சேரும் படத்திற்கு தமிழ்முருகன் (Thamizh Murugan) என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் பர்ஸ்ட் லுக் டீஸர் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
தமிழ் முருகன்
போர் முடிந்து யானை மீது அமர்ந்து முருகன் வருவது போல அந்த பர்ஸ்ட் லுக் வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
சாய் அபயங்கரின் இசை மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். பர்ஸ்ட் லுக் டீஸர் இதோ.






