புதிய கார் வாங்கியுள்ள சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ்… வீடியோவுடன் இதோ

மூன்று முடிச்சு
சன் தொலைக்காட்சியில் டிஆர்பி டாப்பில் தொடர்ந்து 5 சீரியல்கள் இடம்பெறுகின்றன.
என்னென்ன தொடர்கள் என்றால் மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, கயல், மருமகள், அன்னம் இந்த 5 தொடர்கள் தான் முதலில் டாப் வரும், இதில் கடந்த சில வாரங்களாக எந்த மாற்றமும் இல்லை.
அப்படி டாப்பில் இருக்கும் மூன்று முடிச்சு சீரியலின் கதைக்களம் இப்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. சுரேகா திருமணத்தை ஆதாரங்கள் காட்டி எப்படியோ நந்தினி-சூர்யா நிறுத்திவிட்டார்கள், ஆனால் அதன்பின் தான் பிரச்சனையே தொடங்கியுள்ளது.
அதாவது சுரேகா-ஹரிதாவை யாரோ கடத்த இதில் ஹரிதா உயிரிழந்துவிட்டார். அவரின் இறப்பிற்கு காரணம் நந்தினி தான் என்று போலீசார் முதற்கொண்டு சந்தேகப்படுகிறார்கள், சுந்தரவள்ளி பற்றி சொல்லவே வேண்டாம்.
இந்த நேரத்தில் தொடரில் வரும் 2 கதாபாத்திர நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளது, அதை நாம் இதற்கு முன் அறிவித்தோம்.
புதிய கார்
தற்போது வந்துள்ள புதிய தகவல் என்னவென்றால், மூன்று முடிச்சு சீரியலில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதை வென்ற நியாஸ் ஒரு குட் நியூஸ் தெரிவித்துள்ளார்.
அதாவது நடிகர் நியாஸ் புதியதாக ஒரு கார் வாங்கியுள்ளாராம், வாங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரே வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.






