சினிமாவில் நுழையும் ராகவா லாரன்ஸ் மகள்.. என்ன படித்திருக்கிறார் தெரியுமா?

டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல துறைகளில் திறமையை நிரூபித்தவர் ராகவா லாரன்ஸ். முனி, காஞ்சனா என ஹாரர் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா நான்காம் பாகத்தை எடுத்து வருகிறார்.
அது மட்டுமின்றி லோகேஷின் LCUவில் பென்ஸ் என்ற படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
லாரன்ஸின் முந்தைய படங்களான சந்திரமுகி 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் அடுத்து அவரது ரசிகர்கள் காஞ்சனா 4 படத்தை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இயக்குனராகும் மகள்
நடிகர் ராகவா லாரன்ஸின் மகள் ராகவி அமெரிக்காவில் சினிமா பற்றிய படிப்பை முடித்து தற்போது நாடு திரும்பி இருக்கிறார். அவரை விரைவில் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த லாரன்ஸ் முடிவெடுத்து இருக்கிறாராம்.
விரைவில் ராகவா லாரன்ஸ் மகள் இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு வரும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.






