அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல்

அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல்

தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக உயிரிழந்த நடிகரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

கருப்பு சுப்பையா

தமிழ் திரையுலகில் நகைச்சுவையின் ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்கள் இருவருடன் சேர்ந்து நடித்து ரசிகர்களிடையே கவனத்தை பெற்றவர் நடிகர் கருப்பு சுப்பையா. ‘பெரிய மருது’, ‘கட்டபொம்மன்’ என 1980 முதல் 1990 வரை வெளிவந்த பல தமிழ் திரைப்படங்களில் இவரை நீங்கள் பார்க்கலாம். நகைச்சுவை காட்சி ஒன்றில் நடிகர் கவுண்டமணி நடிகர் கருப்பு சுப்பையாவை ‘ஆப்பிரிக்கா அங்கிள்’ என அழைப்பது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.

அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் | Karuppu Subbiah Died Because Acted This Character

[

]

இந்நிலையில், இயக்குநர் N.K. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த ‘பெரிய மருது’ திரைப்படத்தில் நடிகர்கள் கவுண்டமணியும், செந்திலும் ஈயம் பூசும் தொழில் செய்பவர்களாக நடித்திருப்பார்கள்.

அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் | Karuppu Subbiah Died Because Acted This Character

அப்போது ஒரு காட்சியில், தன்னிடம் இல்லாத ஒரு அண்டாவிற்கு ஈயம் பூச எவ்வளவு செலவாகும் என நடிகர் கருப்பு சுப்பையா கேட்பார். இதனால், கடுப்பாகும் கவுண்டமணியும், செந்திலும் அவருக்கு ஈயம் பூசிவிடுவார்கள். இந்த நகைச்சுவை காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால், இந்த நகைச்சுவை காட்சியின் மூலம் நடிகர் கருப்பு சுப்பையாவின் வாழ்க்கை தலைகீழாக மாறி, அவருடைய உயிரை குடித்துவிட்டது.

அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் | Karuppu Subbiah Died Because Acted This Character

கதாபாத்திரத்தால் மரணம் 

அந்த காட்சியில் நடிக்கும்போது, நடிகர் கருப்பு சுப்பையா உடலில் உண்மையாக பெயிண்ட் அடித்திருக்கிறார். இதனால் அவரது உடலுக்குள் பெயிண்ட் சென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டார் என மறைந்த நடிகர் மனோபாலா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும், கருப்பு சுப்பையா தன்னுடைய இறுதி காலகட்டத்தில் பல வாய்ப்புகள் இல்லாமலும், கவனிக்க கூட ஆள் இல்லாமலும் பரிதாபமாக கடந்த 2013ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். 

அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் | Karuppu Subbiah Died Because Acted This Character

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *