நண்பர்கள் முன் அசிங்கப்படுத்திய வானதி, சோகத்தில் பாண்டி… அய்யனார் துணை சீரியல் எபிசோட்

நண்பர்கள் முன் அசிங்கப்படுத்திய வானதி, சோகத்தில் பாண்டி… அய்யனார் துணை சீரியல் எபிசோட்


அய்யனார் துணை

நிலா அய்யனார் துணை வீட்டைவிட்டு வெளியே செல்ல மாட்டார் என்று தான் அனைவரும் நம்பினார்கள்.

ஆனால் நிலா, தனது அம்மா-அப்பா கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை, அவர்கள் எனக்காக இங்கேயே இருக்க சம்மதித்துள்ளார்கள், என்னை வேலை பார்க்க கூறுகிறார்கள், இதற்கு மேல் நான் அவர்களிடம் என்ன சொல்வது என தனி வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்.

நிலா தனியாக சென்ற அன்றே சோழன் அவருக்கு பிடித்த பரோட்டா வாங்கிக்கொண்டு சென்று சாப்பிடுகிறார்.

நண்பர்கள் முன் அசிங்கப்படுத்திய வானதி, சோகத்தில் பாண்டி... அய்யனார் துணை சீரியல் எபிசோட் | Ayyanar Thunai Serial May 26 Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில் முக்கியமான விஷயம் என்றால் அது வானதி-பாண்டி காட்சிகள் தான். வானதி தனது நண்பர்களை சந்தித்த பாண்டியுடன் ஒரு உணவகம் செல்கிறார். பாண்டியும் கொஞ்சம் உடை எல்லாம் மாற்றி செல்கிறார்.

அங்கு சென்றதில் இருந்தே வானதியின் நண்பர்கள் பாண்டியை கலாய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பாண்டியும் பொறுமையாக அவர்கள் கிண்டல் செய்வதை எல்லாம் தாங்கிக்கொண்டு இருக்கிறார்.

நண்பர்கள் முன் அசிங்கப்படுத்திய வானதி, சோகத்தில் பாண்டி... அய்யனார் துணை சீரியல் எபிசோட் | Ayyanar Thunai Serial May 26 Episode

ஆனால் வானதியும் அவர்களுடன் சேர்ந்து அமைதியாக உள்ளார், அதோடு நீ ஏன் இப்படி இருக்கிறாய் என சண்டை போடுகிறார். நீ ஏன் மெக்கானிக் கடை வைத்திருப்பதாக கூறுகிறாய், வேறு ஏதாவது சொல்லலாம் ல. சாப்பாடு ஆர்டர் செய்ய சொன்ன உனக்கு வேண்டியது சொல்ல தெரியாதா என கண்டபடி திட்டுகிறார்.

இதனால் மனம் வருத்தம் அடைந்த பாண்டி அங்கிருந்து யாருக்கும் சொல்லாமல் வெளியே வந்துவிடுகிறார். மன வருத்தத்தில் சோழனுக்கு போன் செய்தார் அவர் எடுக்கவில்லை, உடனே நிலாவிற்கு போன் செய்து உங்களை பார்க்க வருலாமா என்கிறார்.

நண்பர்கள் முன் அசிங்கப்படுத்திய வானதி, சோகத்தில் பாண்டி... அய்யனார் துணை சீரியல் எபிசோட் | Ayyanar Thunai Serial May 26 Episode

நிலா வரச்சொல்ல அங்கு சென்று அவரிடம் ஹோட்டலில் நடந்த விஷயத்தை கூறுகிறார். அவர்களது நண்பர்கள் கிண்டல் செய்தது கூட பரவாயில்லை, வானதியும் ஒன்றும் பேசாமல் இருக்கிறாள். அங்கு யாரிடமும் சொல்லவில்லை, ஆனால் இப்போது வரை வானதி ஒரு போன் கூட செய்யவில்லை.

அந்த இடத்தில் வானதி எனக்கு சப்போர்ட் செய்திருக்க வேண்டும் தானே என கேட்க நிலா கண்டிப்பாக செய்திருக்க வேண்டும் என்கிறார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *