சினிமாவில் நடிக்கப்போவதில்லை.. கண்ணீர் விட்டு அழுது பேசிய நடிகர் ரவி மோகன்

ரவி மோகன் – ஆர்த்தி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார்.
ஹீரோவாக இதுவரை வலம் வந்த ரவி மோகன் தற்போது யோகி பாபுவை வைத்து ‘An Ordinary Man’ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த ஆண்டு ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து செய்தி பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.
ரவி மோகன் அதிரடி முடிவு
இவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் அதிர்ச்சியளிக்கும் முடிவு ஒன்றை அறிவித்துள்ளார்.
அதாவது, விவாகரத்து கிடைக்கும் வரை இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என கூறியுள்ளார். மேலும், இதுவரை நடித்த படங்களையும் வெளியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார். ரவி மோகனின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும், குழந்தைகளை பார்க்க என்ன அனுமதித்தில்லை. பள்ளிக்கு கூட பாடிகாட் உடன் அனுப்புகிறார்கள். தினமும் என் குழந்தைகளுடன் செஸ் விளையாடி அவர்களிடம் தோற்றுப்போவேன்; எனக்கு பாசமில்லையா?. எனக்கு நடந்தது பிளாக் மெயில் திருமணம், கையை அறுத்துக்கொண்டு மிரட்டி என்னை திருமணம் செய்தார், என்னை அடிமையாக வைத்திருந்தார்கள்.” என கண்ணீர் விட்டு அழுது பேசியுள்ளார்.






