ரோஹினி என் மனைவி என மனோஜ் செய்த காரியம், ஷாக்கில் குடும்பம்… சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
அண்ணாமலை-விஜயா, இவர்களுக்கு 3 மகன்கள், அனைவருக்குமே திருமணம் நடந்துவிட்டது.
மனைவி, மகன்கள், மருமகள் என அனைவருடனும் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்பதே அண்ணாமலையின் ஆசை, அவரின் ஆசைக்கு நேர் எதிரான எண்ணம் கொண்டவர் தான் விஜயா.
இப்போது தனது மகன் மனோஜுடன் இணைந்து விஜயா செய்த காரியத்தால் இப்போது வீட்டில் பெரிய பிரச்சனை வெடித்துள்ளது.
எபிசோட்
சிந்தாமணி போட்ட வலையில் விஜயா மட்டும் இல்லை ரோஹினியும் தான் சிக்கிக்கொண்டு இருக்கிறார். பைனான்சியரிடம் பணத்தை கொடுத்து எப்படியோ மனோஜை வெளியே எடுத்துவிட்டார்.
அப்போதே மனோஜ் ரோஹினி பக்கம் கொஞ்சம் சாய்ந்துவிட்டார். இன்றைய எபிசோடில், ஷோரூம் வந்த ரோஹினி மனோஜை வழக்கம் போல் மனம் மாற வைக்க ஆசையாக பேசுகிறார். ரோஹினி வலையில் தற்போது விழுந்த மனோஜ் இருவரும் ஸ்ருதி ரெஸ்டாரன்டுக்கு சாப்பிட செல்கிறார்கள்.
அங்கு முத்து-மீனா, ஸ்ருதி-ரவி என 4 பேரும் இருக்கிறார், மனோஜ்-ரோஹினி ஜோடியாக வந்ததை பார்த்து அந்த 4 பேரும் ஷாக் ஆகிறார்கள். அம்மாவிற்கு தெரிந்தால் என்ன ஆகும் எப்படி இவளுடன் சுற்றுகிறாய் என கேட்க அவரோ என் மனைவியுடன் சாப்பிட வந்தேன் என்ன தவறு என கேட்கிறார்.
மனோஜ் ரோஹினியை மனைவி என கூறி பேசியதும் ஷாக் ஆகிறார்கள்.
அடுத்து மீனா தன்னை மிரட்டியதால் கோபத்தில் சிந்தாமணி பைனான்சியரை வைத்து அடுத்த பிளான் போடுகிறார்.






