மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிசில்டா பிரச்சனையில் கடைசி முடிவு… பிரபலம் பதிவு

மாதம்பட்டி ரங்கராஜ்
சமையல் கலைஞர்கள் இப்போதெல்லாம் அதிகமாகி விட்டனர், அப்படி சில வருடங்களில் மிகவும் பிரபலமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
சமையலை தாண்டி மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் நடித்து மக்களின் கவனம் பெற்றவர் அதன்பின் தனது சொந்த தொழிலில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். தொழிலை தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நடுவராக கலக்கி வருகிறார்.
தொழிலில் படு பிஸியாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து ஒரு விஷயம் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஜாய் கிரிசில்டா
கடந்த 2023ம் ஆண்டு எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜிற்கும் திருமணம் நடந்ததாக கூறி ஜாய் கிரிசில்டா பரபரப்பு கிளப்பியிருந்தார்.
நான் கருவுற்று இருந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் என்னிடமிருந்து விலகினார் என்று குற்றம்சாட்டியிருந்தார் ஜாய் கிரிசில்டா. அந்த வழக்கு அடுத்தடுத்து பரபரப்பாக நடக்க கடைசியாக DNA டெஸ்ட் எடுப்பதில் வந்தது.
DNA டெஸ்ட் எடுத்ததில் ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது மாதம்பட்டி ரங்கராஜ் மகன் தான் என உறுதியானது.
இந்த நிலையில் ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாவில், டிஎன்ஏ டெஸ்ட்டுக்குப் பிறகு என்ன நடந்தது என்பது குறித்து கேட்பவர்களுக்கு இந்த அப்டேட். ராகா ரங்கராஜ் தன்னுடைய மகன் என்றும், வாழ்நாள் முழுவதும் அவருக்கு உறுதுணையாக இருப்பதாகவும், எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்ததாக பதிவிட்டுள்ளார்.






