ஜவான் படத்தின் மாபெரும் வெற்றி.. மீண்டும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்..

ஜவான் படத்தின் மாபெரும் வெற்றி.. மீண்டும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்..


அட்லீ 

ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் ராக்கா.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் பிறந்தநாளின்போதுதான் இப்படத்தின் First லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ராக்கா படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

கேமியோ ரோலில் ஷாருக்கான்

இந்த நிலையில், இப்படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஏற்கனவே ஜவான் படத்தில் ஷாருக்கான் நடித்திருந்த நிலையில், தற்போது ராக்கா படத்தில் கேமியோ ரோலில் வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

ஒருவேளை இது உண்மையான தகவலாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அவர் என்ட்ரி தரும் சீன் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆனால், சமீபத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவிருந்த ஷாருக்கான், தன்னுடைய கிங் படத்திற்கான தோற்றத்தை மாற்ற முடியாது என கூறி, ஜெயிலர் 2-வில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *