என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ

என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ


அய்யனார் துணை

சேரன் – சந்தா திருமணம் நடக்கவிருந்த நிலையில், சாந்தாவின் மாமா பிஹாரிலிருந்து வந்து அவரை இழுத்து சென்றுவிட்டார். இதனால், சேரன் – சந்தா திருமணம் நடக்கவில்லை. மீண்டும் திருமணம் நின்றுபோனதால் சேரன் மனக்கவலையில் உள்ளார்.

என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ | Chozhan In Trouble In Ayyanar Thunai Serial



இந்த நிலையில், அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிரச்சனையில் சோழன்



சோழனின் காரில் காதல் ஜோடிகள் திருமணம் செய்வதற்காக செல்கின்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் அவர்களுடைய கதையை கேட்டு தெரிந்துகொள்ளும் சோழன், அவர்களுக்கு உதவி செய்கிறார்.

அந்த நேரத்தில், ஓடி வந்து திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் வீட்டிலிருந்து அவரது மாமாவும் ஆட்களும் வந்துவிடுகின்றனர். பெண் வீட்டில் இருந்து வந்தவர்களை பார்த்து திருமணம் நடக்கவிருந்த நிலையில், காதலன் ஓடிவிடுகிறான்.

என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ | Chozhan In Trouble In Ayyanar Thunai Serial

அவனுடன் வந்த நண்பர்களும் ஓடிவிட, அந்த பெண் சோழனைத்தான் திருமணம் செய்துகொள்ள வந்துள்ளார் என பெண்ணின் மாமா புரிந்துகொள்கிறார். இதனால் குழப்பத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் நிற்கிறார் சோழன்.

ஏற்கனவே ஓடி வந்துதான் நிலாவை திருமணம் செய்தார். தற்போது மீண்டும் ஓடி வந்து இரண்டாம் திருமணமா சோழன் என நகைச்சுவையாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.  இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *